கொழும்பில் வெடித்து சிதறும் மின்மாற்றிகள்! திட்டமிட்ட சதி செயலா?

Report Print Vethu Vethu in சமூகம்
256Shares

கொழும்பில் இன்று மின்மாற்றி ஒன்று வெடித்து சிதறியமையினால் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கொழும்பு டாம் தெருவிலுள்ள (Dam Street) மின்மாற்றி ஒன்றே இவ்வாறு வெடித்து சிதறியுள்ளது.

தீயை அணைக்கும் நடவடிக்கையில் கொழும்பு தீயணைப்பு பிரிவின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டன.

இந்த தீ விபத்தினால் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

அண்மைக்காலமாக கொழும்பு பிரதேசத்திற்குட்பட்ட பகுதிகளில் மின்மாற்றி வெடித்து சிதறி வருகிறது.

நாடு தழுவிய ரீதியாக மின்சார விநியோக தடை அமுலில் உள்ள நிலையில், இவ்வாறு மின்மாற்றி வெடித்து சிதறும் சம்பவங்களால் மக்கள் மத்தியில் பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளன.

இதுவொரு திட்டமிட்ட செயற்பாடாக இருக்கலாம் எனவும் பொதுமக்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.