திருகோணமலை, கிண்ணியா பிரதேசத்தில் ஏழு மாதங்களாக 42,000 ரூபாய் தாபரிப்பு பணம் செலுத்தாத நபரொருவருக்கு நீதவான் ஏழு மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் இன்று குறித்த நபரை ஆஜர்படுத்திய போதே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவருக்கே இவ்வாறு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் இரண்டு பிள்ளைகளுக்கு மாதாந்தம் 6000 ரூபாய் வீதம் ஏழு மாதங்களாக 42,000 ரூபாவை தாபரிப்பு பணமாக செலுத்தாது தலைமறைவாக இருந்துள்ளார்.
இந்நிலையில் மனைவி செய்த முறைப்பாட்டுக்கமைய அந்நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.