திடீரென மயங்கி விழுந்த இளைஞன் உயிரிழப்பு!

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று கரப்பந்து விளையாட்டு போட்டியில் பங்குபற்றிய இளைஞன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவில் தொடரும் வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் 4ஆம் வட்டாரம் கோம்பாவில் பகுதியைச் சேர்ந்த இராசேந்திரம் நிதர்சன் என தெரிவிக்கப்படுகின்றது.

இளைஞனின் சடலம் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் பிரேத பரிசோதனையின் பின்னர் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.