புளியங்குளம் இராமனூர் பகுதியில் நேற்று இரவு 9.30 மணியளவில் சோதனை நடவடிக்கையை மேற்கொண்ட பொலிஸார் அனுமதியின்றி லொறியில் கொண்டு செல்லப்பட்ட வாகனத்தில் ஏற்றிய மாடுகளுடன், மூவரை கைது செய்துள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
புளியங்குளம் பகுதியில் இருந்து றூவான்வெல்ல பகுதி நோக்கி லொறி வாகனத்தில் அனுமதி பத்திரங்களுக்கு மேலதிகமாக மாடுகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
வாகனத்தை வழி மறித்து சோதனை செய்த புளியங்குளம் பொலிஸார் குறித்த மாடுகளை மீட்டுள்ளதுடன், வாகனத்தையும் அதில் பயணித்த 29, 34 மற்றும் 37 வயதுடையவர்களையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று வவுனியா நீதவான் நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.