வவுனியா பிரதேச செயலாளருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

Report Print Gokulan Gokulan in சமூகம்

காணி முறைகேடு தொடர்பாக வவுனியா பிரதேச செயலாளருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெரியவருவதாவது,

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வேறு இடங்களில் வசிப்பவர்களின் காணிகளை வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா, குடியேற்ற உத்தியோகத்தர் பா.சுரேஸ், கிராம சேவகர் பொ.ஜெயபாலன் ஆகியவர்களினால் விற்பனை செய்யப்பட்டதாக கூறி இந்த முறைப்பாட்டினை மனித உரிமை ஆணைக்குழுவில் ஊழலற்ற மக்கள் அமைப்பு இந்த முறைப்பாட்டை செய்துள்ளது.

மேலும் இது தொடர்பாக மாகாண காணி ஆணையாளர் மற்றும் வவுனியா மாவட்ட செயலாளர் ஆகியோரினை மனித உரிமை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு கோரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் எம்.ஆர்.பிரியதர்சனவிடம் எமது செய்தியாளர் கேட்டபோது,

இது தொடர்பாக வடமாகாண ஆளுனர் சுரேன் ராகவன் மாகாண காணி ஆணையாளர் மற்றும் வவுனியா மாவட்ட செயலாளர் இருவரிடமும் விசாரணை செய்யுமாறு கேட்டுள்ளார்.

இதேவேளை மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு கிடைக்கப்பெற்றவுடன் மாகாண காணி ஆணையாளர், வவுனியா மாவட்ட செயலாளரிடமும் இவ் முறைப்பாடு தொடர்பான அவசரமான அறிக்கை கோரலினையும், இவ்விடயம் தொடர்பாக எடுக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பாகவும் கோரியுள்ளதுடன் ஆளுனருக்கு வழங்கப்பட்ட அறிக்கை தொடர்பாகவும் கேட்டுள்ளோம்.

மேலும் இவ்விடயத்தினை நாம் சிறிய விடயமாகவும் பார்க்கவில்லை. ஏனெனில் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோரின் காணி என கூறப்பட்டுள்ளமையால் இது ஒரு முக்கியமான பிரச்சினையாகவே பார்க்கின்றோம்.

அதன் அடிப்படையில் 16.4.2019 அன்று ஆணைக்குழு முன்னிலையில் மாகாண காணி ஆணையாளர் மற்றும் வவுனியா மாவட்டச் செயலாளர் ஆகியோரினை முன்னிலையாகுமாறு கூறியுள்ளோம் என தெரிவித்தார்.