முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவிடம் 8 மணித்தியாலங்கள் விசாரணை

Report Print Kamel Kamel in சமூகம்

முன்னாள் கடற்படைத் தளபதி அடமிரால் வசந்த கரன்னாகொடவிடம் எட்டு மணித்தியாலங்கள் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

11 இளைஞர்கள் கடத்தி காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இவ்வாறு குற்ற விசாரணைப் பிரிவினர் இன்றைய தினம் கரன்னாகொடவிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

இதற்கு முன்னரும் இரண்டு தடவைகள் வசந்த கரன்னாகொடவிடம் குற்ற விசாரணைப் பிரிவினர் நீண்ட விசாரணை நடத்தியருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று முற்பகல் 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையில் குற்ற விசாரணைப் பிரிவினர் வசந்த கரன்னாகொடவிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.