இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய வெளிநாட்டவர்கள்! கடுமையான தண்டனை வழங்க நடவடிக்கை

Report Print Vethu Vethu in சமூகம்

கண்டியில் வெளிநாட்டவர்கள் சிலரின் செயற்பாடு பதற்றத்தை ஏற்படுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் திரைப்படம் ஒன்றை காட்சிப்படுத்த வெளிநாட்டவர்கள் முயன்றுள்ளனர்.

குறித்த வெளிநாட்டவர்கள் இலங்கையின் பாரம்பரிய ஆடை அணிந்து மோசமாக நடந்து கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணை செய்யுமாறு கலாச்சார அமைச்சர் சஜித் பிரேமதாஸ உத்தரவிட்டுள்ளார்.

கலாச்சாரத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்படும் எந்த ஒரு நபருக்கும் தண்டனை வழங்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.

வெளிநாட்டவர்கள் காட்சிப்படுத்த முயன்ற திரைப்படம் கலாச்சாரத்திற்கு எதிரான ஒரு படம் என குறிப்பிடப்படுகின்றது.

குறித்த நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.