மாணவர்களின் பாவனைக்காக நான்கு மாடி கட்டடம் திறந்து வைப்பு!

Report Print Mubarak in சமூகம்
39Shares

கொழும்பு 02 ரி.பி. ஜாயா ஸாஹிரா கல்லூரியில் மேல் மாகாண சபை உறுப்பினர் அர்ஷாத் நிசாம்தீனின் முயற்சியில் நிர்மாணிக்கப்பட்ட நான்கு மாடிக் கட்டடத்தின் முதல் மாடியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் திறந்த வைத்துள்ளார்.

மாணவர்களின் பாவனைக்காக குறித்த கட்டடத்தை இன்றைய தினம் திறந்து வைத்துள்ளார்.

இப்பாடசாலைக்கு மிகவும் நீண்ட காலத் தேவையாக இருந்து வந்த பாடசாலை கட்டடம் தொடர்பாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அர்ஷாத் நிஜாம்தீனிடம் பாடசாலை நிர்வாகம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க இதனை வழங்கியதால் இன்றைய தினம் அதனை திறந்து வைக்கப்பட்டது.

இக்கட்டட திறப்பு விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மேல் மாகாண சபை உறுப்பினர் நெளசர் பெளசி மற்றும் பாடசாலை நிர்வாகத்தினர் மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.