பளை ஸ்ரீபதி விளையாட்டுக் கழகத்தினருக்கு சீருடை வழங்கி வைப்பு

Report Print Arivakam in சமூகம்
58Shares

யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்டங்களின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு, செலவுத்திட்ட நிதியினூடாக பளை நகரில் அமைந்துள்ள ஸ்ரீபதி விளையாட்டுக் கழகத்தினருக்கு விளையாட்டு சீருடைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீபதி விளையாட்டுக் கழகத்தினரின் வேண்டுகோளுக்கு அமைவாக பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தலைவர் சு.சுரேனின் முன்மொழிவில் இந்த நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தலைவர் சு.சுரேன், உபதவிசாளர் கஜன் மற்றும் உறுப்பினர்களான த.றமேஸ்,க.அருட்செல்வி ஆகியோருடன் பிரதேச செயலக திட்டமிடல் பிரிவு உத்தியோகத்தர்கள், விளையாட்டுக் கழகத்தினர் ஆகியோர் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.