முல்லைத்தீவில் இறந்த யானை ஒன்றின் உடல் மீட்பு!

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவு - மாங்குளம், பழைய கண்டி வீதி கற்கிடங்கு கிராம பகுதியில் இறந்த யானை ஒன்றின் உடல் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவ்விடத்திற்கு சென்ற வனஜீவராசி திணைக்கள அதிகாரிகள் யானையின் உயிரிழப்பு தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்.

இதன்போது குறித்த யானையின் உடலில் காயங்கள் காணப்பட்டுள்ளதுடன், அந்த காயங்களினால் யானை உயிரிழந்திருக்கலாம் என வனஜீவராசி திணைக்கள அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலும் உயிரிழந்த குறித்த யானை கடந்த ஒரு வாரமாக கற்கிடங்கு கிராம பகுதியெங்கும் உலாவி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த யானை உயிரிழந்த நிலையில் இன்று மீட்கப்பட்டுள்ளது.