புத்தாண்டில் ஆசிரிய ஆலோசகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

Report Print V.T.Sahadevarajah in சமூகம்
264Shares

புத்தாண்டுடன் இலங்கையிலுள்ள 4500 சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்களுக்கும் மகிழ்சியான செய்தி கிடைக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்துடன் நேற்று இலங்கை ஆசிரியர் ஆலோசகர் தொழிற்சங்கப்பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் மேற்கொண்ட சந்திப்பையடுத்து இச்செய்தி கிடைக்கப்பெற்றுள்ளது.

மலைநாட்டு புதியகிராமங்கள் தோட்டஉட்கட்டமைப்பு மற்றும் சமுதாயஅபிவிருத்தி அமைச்சர் பழனிதிகாம்பரத்தின் எற்பாட்டில் நுவரேலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் சகிதம் மேற்படி தொழிற்சங்கத்தினர் நேற்று நாடாளுமன்றக்கட்டடத்தில் அமைச்சரைச் சந்தித்தனர்.

தூதுக்குழுவில் இலங்கை ஆசிரியர் ஆலோசகர் தொழிற்சங்கச்செயலாளர் ஜி.சமரக்கோன் தமிழ்ப்பிரிவு இணைப்பாளர் மற்றும் எஸ்.பிரபாகரன் நுவரேலியா ஹற்றன் மாவட்ட இணைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கருத்து தெரிவிக்யைில்,

ஆசிரியஆலோசகர் சேவைக்கான அமைச்சரவைப்பத்திரம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அநேகமாக ஏப்ரல் 30ஆம் திகதிக்குள் அது சாத்தியமாகலாம் என்று உறுதியளித்தார்.

சேவை அமுலாக்கப்படும் வரை தமது போராட்டம் தொடரும் என தூதுக்குழுவினர் கூறிவிடைபெற்றனர். தமக்கான இலங்கை ஆசிரியஆலோசகர் சேவையொன்றை ஸ்தாபிக்கவேண்டும் எனக்கோரி கடந்த 21ஆம் திகதியிலிருந்து நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்திலீடுபட்டு வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.