உலக நாடக தினத்தை சிறப்பித்த நவரச நாடக விழா

Report Print Sinan in சமூகம்

உலக நாடக தினத்தை சிறப்பிக்கும் முகமாக மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் நவரச நாடக விழா நடைபெற்றுள்ளது.

நுவரெலியா, மெரயா தமிழ் மகா வித்தியாலயத்தில் நேற்று கல்லூரியின் முதல்வர் முத்துக்குமார் தலைமையில் இவ்விழா இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் கலை பாடத்தின் பெரும் முக்கியத்துவத்தை நாடகமும் அரங்கியலின் மூலம் மாணவர்கள் மிக சிறப்பாக முன்வைத்துள்ளனர்.

முத்தமிழில் இயல், இசை, நாடகம் பற்றியும் அதில் நாடகத்தின் உயர்வின் சிறப்பையும் மெராயா கல்லூரி ஞாபகமூட்டி நிலை நிறுத்தியமை வரவேற்கத்தக்கதாகும்.

Latest Offers