நாடு கடத்தப்பட்டவரிடம் இருந்து பல்வேறு தகவல்கள் கசிவு!

Report Print Murali Murali in சமூகம்

மாகந்துர மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்ட நிலையில், நாடுகடத்தப்பட்ட மேலும் இருவரிடம் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

37 வயதுடைய மொஹமட் நசீம் மொஹமட் பைசால் மற்றும் 30 வயதுடைய மொஹமட் முபார் மொஹமட் ஜபீரி ஆகிய இருவருமே நேற்றைய தினம் இவ்வாறு நாடு கடத்தப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட இருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது பல குற்றச் செயல்கள் தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

மேலும் நேற்று கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஏற்கனவே இடம்பெற்ற இரு கொலைச் சம்பவங்களுடன் நேரடியாக தொடர்புபட்டவர் என தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த இருவரிடமும் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.