கொழும்பின் புறநகர் பகுதியில் ஆபாச செயற்பாட்டில் ஈடுபட்ட பெண்கள் கைது

Report Print Vethu Vethu in சமூகம்

கொழும்பின் புறநகர் பகுதியான பியகம பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்தி செல்லப்பட்ட விபச்சார விடுதிகள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளன.

இதன்போது அங்கு பணியாற்றிய 7 பெண்கள் மற்றும் 3 முகாமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு விபச்சார விடுதிகளிலும் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ருவன்வெல்ல, நுகேகொடை, மாத்தறை ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 26 - 40 வயதுடைய பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் பியகம பிரதேசத்தில் தொழில் செய்ய செல்வதாக வீட்டில் கூறி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட பெண்கள் மற்றும் முகாமையாளர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.