யாழில் தேசிய நல்லிணக்க புத்தாண்டு பெருவிழா

Report Print Sumi in சமூகம்

சமாதான புத்தாண்டு உதயம் எனும் தேசிய நல்லிணக்க புத்தாண்டு பெருவிழா யாழ். மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கில் இன்று காலை தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சு, தேசிய ஒருங்கிணைப்பு, நல்லிணக்கம் அலுவலகம் மற்றும் யாழ். மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இவ்விழா ஆரம்பமாகியுள்ளது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கலந்து கொண்டுள்ளார்.

வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா, சித்தார்த்தன், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம், வெளிநாட்டு அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

புத்தாண்டை பிரதிபலிக்கும் வகையில் மண்குடிசைகள், பராம்பரிய உணவுகள் என்பன இதன்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

படங்கள் -சுதந்திரன்