ஜனாதிபதியின் செயற்திட்டத்தின் கீழ் போதைப்பொருள் ஒழிப்பு வீதி நாடகமும், கருத்தரங்கும்

Report Print Navoj in சமூகம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நாட்டுக்காக ஒன்றிணைவோம் செயற்திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் மட்டக்களப்பு - வாழைச்சேனை, கோறளைப்பற்றில் போதைப்பொருள் ஒழிப்பை பிரதிபலிக்கும் வகையில் வீதி நாடகம் இன்று இடம்பெற்றுள்ளது.

கோறளைப்பற்று பிரதேச செயலகத்தின் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் தேவமனோகரி பாஸ்கரன் தலைமையில் இந்நாடகம் நடைபெற்றுள்ளது.

விநாயகபுரம் கிராம மக்கள் மத்தியில் இடம்பெற்ற இந்நாடகத்தினை செயலக உத்தியோகத்தர்கள், சமூர்த்தி உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டு பார்வையிட்டுள்ளனர்.

இதேவேளை கோறளைபற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று போதைப் பொருளுக்கு எதிரான கருத்தரங்கொன்றும் இடம்பெற்றுள்ளது.

இதில் ஜனாதிபதி விசேட செயற்திட்ட ஒருங்கிணைப்பாளரும், ஜனாதிபதியின் மொழி பெயர்ப்பாளருமான தெ.உதயரூபன் கலந்து கொண்டு கருத்துக்களை வழங்கியுள்ளார்.

இதில் சமுர்த்தி தலைமை முகாமையாளர் எம்.ஐ.ஏ.அஸீஸ், செயலக கலாச்சார உத்தியோகத்தர் ஏ.எல்.பீர்முகம்மட், அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.