நாட்டில் பலப்படுத்தப்படவுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள்

Report Print Gokulan Gokulan in சமூகம்

எதிர்வரும் புத்தாண்டு தினத்தினை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தவுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ​ரோஹண தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கைகளுக்காக நாடளாவிய ரீதியில் சுமார் 8000 போக்குவரத்து பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

குறித்த நடவடிக்கைகள் இன்று முதல் புத்தாண்டு நிறைவடையும் வரை முன்னெடுக்கப்படவுள்ளது.

வழமையாக ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 10ஆம் திகதி தொடக்கம் 20ஆம் திகதி வரையான 10 நாட்களில் தான் உயிரிழப்புக்கள் மற்றும் விபத்துக்கள் அதிகமாக இடம்பெறும்.

அந்த வகையில் கடந்த ஆண்டு புத்தாண்டு காலப்பகுதியில் 135 பேர் உயிரிழந்துள்ளதுடன், 750 பேர் காயமடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.