திருகோணமலையில் விவசாயிகளுக்கு தெளிவூட்டும் செயற்றிட்டம்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

தேசிய விவசாய ஊக்குவிப்பு வாரத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு விவசாய செய்கை தொடர்பான தெளிவூட்டலும், விவசாயிகளின் பிரச்சினைகளை கேட்டறிந்து கொள்ளும் செயற்றிட்டமும் இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை, தோப்பூர் சந்தை வளாகத்தில் இன்று கிழக்கு மாகாண விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் இச்செயற்றிட்டம் நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் விவசாயத்தை நோய்த் தாக்கத்திலிருந்து எவ்வாறு பாதுகாப்பது, சிறந்த விளைச்சலை பெற விவசாயிகள் பின்பற்ற வேண்டிய செயற்பாடுகள் என்பன தொடர்பில் விவசாய போதனாசிரியர்களினால் விவசாயிகளுக்கு தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஒன்றாய் எழுவோம் சிறுபோகத்தை வெல்வோம் எனும் தொனிப் பொருளின் கீழ் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதில் தோப்பூர், பள்ளிக்குடியிருப்பு, கிளிவெட்டி, பாலத்தோப்பூர், பள்ளிக்குடியிருப்பு பிரதேசங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.