கரைச்சி பிரதேசத்தில் சித்திரை புத்தாண்டு சிறப்பு சந்தை

Report Print Yathu in சமூகம்

வட மாகாண தொழில்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில் சித்திரை புத்தாண்டு சிறப்பு சந்தை இன்று இடம்பெற்றுள்ளது.

கரைச்சி பிரதேசத்தில் உள்ள உள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்தி பொருட்கள் சிறப்பு சந்தையில் வைக்கப்பட்டிருந்தன.

சித்திரை புத்தாண்டை கொண்டாடும் வகையிலும், உள்ளூர் உற்பத்திகளை அதிகரிக்கும் நோக்குடனும் குறித்த விற்பனை சந்தை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கரைச்சி பிரதேச சபை வளாகத்தில் சந்தையின் விற்பனை நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்ட நிலையில் இதில் கரைச்சி பிரதேசசபை தவிசாளர், கரைச்சி பிரதேச செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.