கிளிநொச்சியில் இராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில் புத்தாண்டு நிகழ்வு

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில் புத்தாண்டு நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி படைகளின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ரவிப்பிரிய தலைமையில் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இதில் கிளிநொச்சி படைப் பிரிவினர், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது கிறீஸ் மரம் ஏறுதல், தலையணை சண்டை, பலூன் உடைத்தல் உள்ளிட்ட விளையாட்டுக்கள் பல இடம்பெற்றுள்ளன.

இதேவேளை படையினரின் தற்காப்பு கலை கண்காட்சியும் இடம்பெற்றுள்ளது.