வவுனியாவில் கொள்ளையிடப்பட்ட நகை, பணம் என்பன மீட்பு

Report Print Theesan in சமூகம்

வவுனியாவில் அடகு கடையொன்றிலிருந்து திருடப்பட்ட பணம் மற்றும் நகை என்பன மீட்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் நகை அடகு கடையில் இருந்து பெருந்தொகையான பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான விசாரணைகள் வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த அடகு கடையில் இருந்து கொள்ளையிடப்பட்ட ஆறு இலட்சத்து எழுபத்து மூவாயிரம் ரூபா பெறுமதியான நகையும், பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட பணமும் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட பொருட்கள் இன்று வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு காண்பிக்கப்பட்டன.

இதேவேளை சந்தேகநபரை இன்று வவுனியா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.