இலங்கையில் மனிதர்களை விட அசத்தும் விலங்குகள்! பிரித்தானியர் வெளியிட்ட விநோத காட்சிகள்

Report Print Vethu Vethu in சமூகம்

இலங்கையில் உள்ள குரங்கள் மற்றும் யானைகள் சில செல்பி புகைப்படங்கள் எடுத்து கொண்டுள்ளது.

இலங்கையின் சுற்றுலா துறை தொடர்பில் எடுக்கப்பட்ட ஆவணப்படத்திற்கு போது இந்த செல்பி புகைப்படங்கள் எடுத்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தினால் இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த ஆவணப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆவணப்படத்தின் இலங்கை முழுவதும் உள்ள யானைகள், ஆமைகள், புலிகள், திமிங்கிலங்கள் உட்பட பல விலங்குகள் தொடர்பில் காணொளி எடுக்கபட்டுள்ளது.

இந்த ஆவணப்படத்தை பிரித்தானிய ஆவணப்பட தயாரிப்பு குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் அனைவரும் பெண்கள் என குறிப்பிடப்படுகின்றது.

குறித்த ஆவணப்படத்தை தயாரிக்கும் போது விலங்குள் எடுத்து கொண்ட செல்பி புகைப்படங்களையும் பிரித்தானியா இயக்குனர் வெளியிட்டுள்ளார்.

இலங்கை மிகவும் அழகான நாடு எனவும் இலங்கையில் நம்பமுடியாத வன விலங்குகள் உள்ளதாகவும் இயக்குனர் Nicola Brown தெரிவித்துள்ளார்.