யாழில் கிராம சக்தி செயற்திட்ட மீளாய்வு ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்

Report Print Vamathevan in சமூகம்

யாழில் கிராம சக்தி செயற்திட்ட மீளாய்வு ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

யாழ். மாவட்ட செயலக பிரதான மண்டபத்தில் நேற்று இந்த குழுக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

முன்னெடுக்கப்பட்ட செயற்திட்டங்கள் மற்றும் அதனூடாக கிராம சக்தி இயக்கத்திற்கு கிடைக்கும் வருவாய்கள், வறுமை ஒழிப்பின் அடிப்படை காரணிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா? உரிய முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனால் ஆராயப்பட்டுள்ளது.

கூட்டத்தில் 2017ஆம் ஆண்டின் கிராம சேவையாளர் ரீதியாக மூன்று வேலைதிட்டங்களுக்காக தெரிவு செய்யப்பட்ட குழுக்களின் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் ஆகியோருடைய கிராம சக்தி செயற்திட்டத்திற்கான வகிபங்கு, மக்களின் ஒன்றிணைவு, எதிர்கால செயற்பாடுகள், மேம்படுத்தல் நடவடிக்கைகள் குறித்தும் அனுபவ ரீதியிலாக பெற்று கொண்டிருந்த கருத்துக்களையும் தெரிவித்திருந்தனர்.

இதில் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஷிரால் லக்திலக, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகம், பிரதேச செயலாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.