குளவி கொட்டுக்கு இலக்காகிய தொழிலாளர்கள் வைத்தியசாலையில்

Report Print Gokulan Gokulan in சமூகம்

கொட்டகலையில் தேயிலை மலையில் கொழுந்து பறித்து கொண்டிருந்த தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொட்டகலை, ஸ்மோல் டிரேட்டன் தோட்ட தேயிலை மலையில் இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். .

குறித்த மலையின் அடிவாரத்தில் இருந்த குளவி கூடு கலைந்ததன் காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

இதன்போது காயங்களுக்குள்ளான 21 ஆண் தொழிலாளர்களும் கொட்டகலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒருவர் மாத்திரம் கொட்டகலை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.