திருகோணமலை மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

Report Print Gokulan Gokulan in சமூகம்

திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா பகுதியில் அதிகரித்து வரும் அதிக வெப்பநிலை காரணமாக பகல் நேரத்தில் தேவையற்ற நேரத்தில் வீட்டை விட்டு வெளியில் செல்வதை தவிர்த்து கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் இன்று இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

அதிகரித்துள்ள வெப்பநிலை காரணமாக பல்வேறு நோய் தாக்கங்கள் ஏற்படுவதாகவும், 15 நிமிடங்களுக்கு ஒரு முறை நீர் அருந்துமாறும் பொது மக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.