புத்தரின் புனித பல்லை வழிபட்ட இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்!

Report Print Steephen Steephen in சமூகம்

உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சஞ்சய் மித்ரா இன்று முற்பகல் கண்டி தலதா மாளிகையில் புத்தரின் புனித பல்லை வழிபட்டுள்ளார்.

இந்திய - இலங்கை பாதுகாப்பு மாநாட்டின் 6வது கூட்டத்திற்கான இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரதிநிதிகளுடன் இலங்கை வந்துள்ளார்.

இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவின் அழைப்பின் பேரில் இவர்கள் இலங்கை வந்துள்ளனர். இந்திய - இலங்கை பாதுகாப்பு மாநாட்டுக் கூட்டம் நேற்று பாதுகாப்பு அமைச்சு வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிலையில், இன்று கண்டி தலதா மாளிகையில் உள்ள புத்தரின் புனித பல்லை வழிபட்ட இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிறப்பு அதிதிகளின் நினைவு ஏட்டில் குறிப்பு ஒன்றை எழுதியுள்ளார்.

இதன் பின்னர் தலதா மாளிகைக்கு நிதி உதவியை வழங்கிய அவர், உலக பௌத்த அருங்காட்சியகத்தில் உள்ள இந்திய பிரிவை பார்வையிட்டுள்ளார். சஞ்சய் மித்ராவுடன் இந்திய பாதுகாப்பு அதிகாரிகளும் சென்றிருந்தனர்.