முல்லைத்தீவு - பாண்டியன்குளம் பகுதியில் இருந்து சடலம் மீட்பு!

Report Print Yathu in சமூகம்

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பாண்டியன்குளம் பகுதியில் இன்று மீட்கப்பட்ட சடலம் கடந்த மாதம் காணாமல் போன மனநலம் பாதிக்கப்பட்டவருடையது என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பாண்டியன்குளம் பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்டு அவரது பெற்றோருடன் வசித்து வந்த ஒருவர் கடந்தமாதம் 22ம் திகதி முதல் காணாமல் போயிருந்தார்.

இவர் காணாமல் போனமை தொடர்பில் மல்லாவிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், உறவினர்கள் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து பல்வேறு பகுதிகளிலும் தேடுதல்களை மேற்கொண்டிருந்தனர்.

எனினும், குறித்த நபர் பற்றிய தகவல் ஏதுவும் கிடைக்காத நிலையில பெற்றோர் உறவினர்கள் தொடர்ந்தும் தேடுதலை மேற்கொண்டனர்.

இந்நிலையில், இன்று காலை ஆற்றங்கரையில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக வழங்கிய தகவலையடுத்து அவ்விடத்திற்குச்சென்ற உறவினர்கள் அணிந்திருந்த ஆடை மற்றும் தடையப்பொருட்களை வைத்து கடந்த 22ம் திகதி காணாமல் போன பாலசிங்கம் ஜெயபவான் என்பவருடையது என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை மல்லாவிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.