வெலிகடை சிறைச்சாலையில் கைதியிடம் சயனைட் குப்பிகள்

Report Print Steephen Steephen in சமூகம்

வெலிகடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவரிடம் இருந்து இரண்டு சயனைட் குப்பிகள் மற்றும் இரண்டு மருந்து ஏற்றும் ஊசிகளை பொலிஸ் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

வெளி நபர் ஒருவர் கைதி ஒருவருக்கு சயனைட் குப்பிகள் மற்றும் மருந்து ஊசிகளை வழங்கி இருப்பதாக மேல் மாகாண புலனாய்வு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து நடத்திய தேடுதலில் அவை கைப்பற்றப்பட்டுள்ளன.

போதைப் பொருள் வழக்கில் கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மரால சுரங்க என்ற சமன் புஷ்பகுமார என்ற நபரிடம் இருந்த சயனைட் குப்பிகள் மற்றும் மருந்து ஊசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

எதிரணியை சேர்ந்த இரண்டு நபர்களை சிறைச்சாலைக்குள் வைத்து கொலை செய்ய இவை வழங்கப்பட்டிருந்ததாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைப்பற்றிய சயனைட் மற்றும் மருந்து ஊசிகள் மேலதிக விசாரணைகளுக்காக பொரள்ளை பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.