ஜனாதிபதி வேலைத்திட்டம் வாகரையில் ஆரம்பம்

Report Print Navoj in சமூகம்

நாட்டுக்காக ஒன்றிணைவோம் என்ற தொணிப்பொருளில் ஜனாதிபதி செயலகத்தினால் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இன்றைய தினம் வாகரை பிரதேசத்தில் உள்ள ஆலங்குள கிராமத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது.

வாகரை பிரதேச சபையும் ஆலங்குள சனசமூக நிலையமும் இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.

இதன்போது பழமரங்கள் நடப்பட்டதுடன் சமூக குடிநீர் வழங்கல் தொடர்பான திட்டத்தில் பிரதேச மக்களுக்கு புதிய குடிநீர் இணைப்பும் பெறுவதற்கான விண்ணப்பமும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

போதையற்ற நாடு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரதேச சபை தலைவர் சி.கோணலிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் நா.மணிவண்ணன்,மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களும் அதிதிகளாக கலந்த கொண்டனர்.