பாலியல் தொழில் விடுதியில் இருந்த ஏழு பெண்கள் கைது

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - அலஸ்தோட்டம் பகுதியில் பாலியல் தொழில் விடுதியில் உள்ள ஏழு பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலினை அடுத்து சட்டவிரோதமாக இயங்கிய இரண்டு பாலியல் தொழில் விடுதி இன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.

இதன்போது கைது செய்யப்பட்ட ஏழு பெண்களிடமும் பொலிஸ் விசாரணைகள் இடம்பபெற்று வருகின்றது.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.