மொரவெவ பிரதேச சபையின் அவசரத் தேவைகள் உடன் தீர்க்கப்படும்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - மொரவெவ பகுதியில் அமைக்கப்பட்ட டப்லியூ.ஆர்.றம்பண்டா ஞாபகார்த்த மண்டபம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பிரதேச சபையின் தவிசாளர் சங்கைக்குரிய பொல்ஹேன் கொட உபரத்தின தேரர் தலைமையில் இடம்பெற்ற வைபவத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக பங்கேற்று மண்டபத்தின் பெயர் பலகையினை திரை நீக்கம் செய்துவைத்துள்ளார்.

அத்துடன் மொரவெவ பிரதே சபையின் அபிவிருத்தி தொடர்பான கூட்டம் பிரதேச சபை உறுப்பினர்களின் பங்கேற்புடன் பிரதேச சபை பிரதான மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

கல்வி, சுகாதாரம் மற்றும் சபையின் அவசிய தேவைகள் குறித்து பிரதேச சபையின் உறுப்பினர்கள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து ஆளுநர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் அவசரமாக தீர்க்கப்பட வேண்டிய தேவைகள் தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு இது தொடர்பாக அவசர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.