நிர்க்கதிக்குள்ளாகும் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் அபாயமளிப்பதற்கு ஹிஸ்புல்லாஹ் ஆதரவு

Report Print Rusath in சமூகம்

பாதிக்கப்பட்டு நிர்க்கதிக்குள்ளாகும் பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் அபாயமளிப்பதற்கான ஆலோசனைக்கு கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தனது முழுமையான ஆதரவை வழங்கியுள்ளதாக காத்தான்குடி நகர சபை உறுப்பினரும், மகளிர் நல ஆர்வலருமான ஸல்மா அமீர் ஹம்ஸா இன்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

கிழக்கு மாகாணத்தில் மகளிர் காப்பகம் ஒன்றின் தேவை குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், காத்தான்குடி பல்துறைசார்ந்த மகளிர் நலனோம்பு அமைப்புக்களின் பிரதிநிதிகள், துறைசார்ந்தவர்களுக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது நிறுவப்படுவதற்கான ஆதரவும், உறுதி மொழியும் ஆளுநரினால் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பின்போது சமகாலத்தில் பெண்கள் எதிர்நோக்கும் பலவகையிலான பிரச்சினைகள் தொடர்பாக ஆளுநரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன், பல்வேறு தேவைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன் பெண்களின் நலன்காக்கும் வகையில் விடுத்த அனைத்து வேண்டுகோள்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், மிக விரைவில் இவற்றுக்கான வேலைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.