சிறுபோக நெற்பயிர்செய்கை மேற்கொள்ள அனுமதி வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கை

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவு-புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பேறாற்று, 1200 ஏக்கர் வயல் நிலங்களில் இம்முறை சிறுபோக நெற்பயிர்செய்கை மேற்கொள்ள அனுமதி தருமாறு அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு கிழக்கு பேறாறு சிற்றாறு நீர்ப்பாசனத்திற்குள் செய்கை பண்ணப்படும் வயல் நிலங்களில் முத்தையன்கட்டு குளத்தின் கீழ் இம்முறை சிறுபோக நெற்பயிர்ச் செய்கை மேற்கொள்வதற்கு போதியளவு நீர்வசதி இருந்தும் சிறுபோக நெற்பயிர்ச்செய்கை செய்ய இதுவரை அனுமதி கிடைக்கவில்லை என விவசாயிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த 1200 ஏக்கர் வயல் நிலங்களில் நெற்பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்குமாறு முல்லைத்தீவு கமநல உதவி ஆணையாளருக்கு புதுக்குடியிருப்பு கிழக்கு கமக்கார அமைப்பினூடாக இன்று மகஜர் ஒன்றை விவாசாயிகள் கையளித்துள்ளனர்.