எந்த தடைகள் வந்தாலும்....! வடக்கு ஆளுநர் சூளுரை

Report Print Murali Murali in சமூகம்

நான் இருக்கும் கடைசி நிமிடம் வரை விழுந்துபோயுள்ள இந்த தேசத்தை மீளவும் வலிமைபெற வைப்பதற்கு எந்த தடை வந்தாலும் முயற்சிப்பேன் என வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

வட மாகாண சபைக்கு சொந்தமான திணைக்களங்களில் பணிபுரிவதற்கு உள்வாங்கப்பட்ட அலுவலக உதவியாளர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “இந்த நியமனக்கடிதம் வழங்குவதில் எனக்கு மகிழ்ச்சியே. ஏனெனில் இந்த தேசத்தை கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப பணியை செய்யப்போகும் மக்கள் நீங்கள்.

ஒரு நிறுவனத்தில் காரியாலய சேவகனை சந்தித்தே நிறுவனத்தின் தலைவரை சந்திக்கின்றனர். எனவே மக்களுக்கும் அரசிற்கும் மத்தியிலுள்ள சிறந்த பாலமாக நீங்கள் இருக்கவேண்டும்.

அரசியல் விடயங்களை புறம்தள்ளி மனிதாபிமானத்துடனும் இறை பயத்துடனும் உங்கள் தொழிலை நீங்கள் செய்வீர்கள் என்று விண்ணப்பம் வைக்கின்றேன் என்று ஆளுநர் குறிப்பிட்டார்.