இதற்கு நாங்கள் என்ன செய்வது? அலட்சியமாக பதிலளித்த பொலிஸார்

Report Print Gokulan Gokulan in சமூகம்

இலஞ்ச பணத்திற்கு விலை போன அரசாங்க ஊழியர்கள் தவறு நடை பெறுகின்றது என்று தெரிந்தும் பேசா மடந்தைகளாக இருக்கின்றனர் என பொது மக்கள் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் நெடுங்குளம் சந்திக்கு முன்பாக உள்ள (225×100) மீற்றர் நீளமுள்ள தரிசு நில நீள் சதுரக்காணி ஒன்றில் 100 மேற்பட்ட பனை மரங்கள் JCB இயந்திரத்தின் உதவியுடன் வேரோடு சாய்க்கப்பட்டு இருக்கின்றன. இதனை செய்தவர்கள் அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் பொறுப்பதிகாரிகள் என அப்பகுதியைச் சேர்ந்த கிராமசேவகர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அப்பகுதி கிராமசேவகரிடம் வினவிய போது, இதைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது அவர்கள் கேட்டார்கள், நான் சரி என்று சொன்னேன் என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த போது இதற்கு நாங்கள் என்ன செய்வது என்று அலட்சியமாக பதில் அளித்துள்ளார்கள். இது தொடர்பாக பனை அபிவிருத்தி சபை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்திய போது

அவர்கள் இதை முன்னிட்டு நாங்கள் வருந்துகின்றோம். ஆயினும் முன் கூட்டியே தெரிந்திருந்தால் நாங்கள் ஏதாவது செய்திருப்போம் என்றார்கள்.

இது தொடர்பாக அவ்வூர் பொது மக்களின் கருத்து பனை மரங்கள் அழிப்பது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்திருந்தோம். அவர்கள் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

பொது மக்களின் வரிப்பணத்தை சம்பளமாகப் பெறும் அரசாங்க ஊழியர்களே கயவர்களின் இலஞ்சப்பணத்திற்கு விலை போகாதீர்கள் என பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.