யாழ். பல்கலைக்கு அவசரமாக செல்லவுள்ள பல்கலைக்கழகங்களின் தொழிற்சங்கங்கத்தினர்

Report Print S.P. Thas S.P. Thas in சமூகம்

அனைத்து பல்கலைக்கழகங்களின் தொழிற்சங்கங்களின் சம்மேளன தலைவர், செயலாளர் மற்றும் ஆலோசகர்கள் ஏப்ரல் 10 ஆம் திகதி புதன்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு அவசர விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக பல்கலைக்கழக ஊழியர் சங்கத்திக் இணைச்செயலாளர் சிவரூபன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அனைத்து பல்கலைக்கழகங்களின் தொழிற்சங்கங்களின் சம்மேளன தலைவர், செயலாளர் மற்றும் ஆலோசகர்கள் ஏப்ரல் 10 ஆம் திகதி புதன்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு அவசர விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.

கைவிரல் அடையாள பதிவு இயந்திர சுற்று நிரூப அமுலாக்கத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தொழிற்சங்க போராட்டம் தொடர்பிலும் அதன் விளைவுகள் தொடர்பிலும் பல்கலைக்கழகத்தின் பல்வேறு தரப்புகளுடன் கலந்துரையாடி சுமூக நிலை ஏற்படுத்துவதற்கே இவர்கள் வருகை தரவுள்ளனர்.

பாதுகாப்பு உத்தியோகத்தர் இருவர் எவ்வித விசாரணையுமின்றி பல்கலை நிர்வாகத்தால் இடைநிறுத்தப்பட்டமை, ஊழியர்கள் தினவரவுப் பதிவேடுகளை பயன்படுத்த முடியாதவாறு பதிவாளர் தடுத்து வைத்துள்ளமை போன்றவற்றால் நாளாந்த கடமைகளை ஆற்ற முடியாத நிலை உருவாகியுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்று நிரூபத்தினை திரிபுபடுத்தி தவறான உள்ளக சுற்று நிரூபத்தினை வெளியிட்டு அதனை அமுல்படுத்த ஊழியர்களை வற்புறுத்துவதோடு, பீடாதிபதிகள், நிர்வாகிகள் ஊழியரை தனியே அழைத்து நிர்வாக முறைகளை மீறி அச்சுறுத்திவருவதாகவும் ஊழியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.