இலங்கையில் ATM இயந்திரத்தில் பணம் எடுக்கச் செல்பவர்களின் பரிதாப நிலை!

Report Print Vethu Vethu in சமூகம்

இலங்கையில் அமுல்படுத்தப்படும் மின்சார விநியோகத் தடை காரணமாக மக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

திடீரென மின்சார தடை ஏற்படுகின்றமையினால் ATM இயந்திரங்களில் பணம் எடுக்கச் செல்பவர்கள் கடும் சிரமங்களுக்கு முகம் கொடுப்பதாக குறிப்பிடப்படுகின்றது.

வங்கிகள் அற்ற பகுதியில் டெலர் இயந்திரம் ஊடாக பணம் எடுப்பவர்வளே அதிகமாக பாதிப்படைந்துள்ளனர்.

அரசாங்க வங்கிகளுக்கு சொந்தமான ATM இயந்திரம் ஊடாக பணம் பெறுவோர் மின்சார தடை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

சில இடங்களில் அட்டைகள் மற்றும் பற்றுச்சீட்டை வெளியே எடுத்த பின்னரும் பணம் வராமல் உள்ளமையினால் வங்கிகளுக்கு சென்று அறிவிக்க நேரிட்டுள்ளது.

கண்டி பகுதியில் கடந்த இரண்டுவாரங்களாக பணம் கிடைக்காத பலர் உள்ளனர். அறிவிப்பின்றி மின்சாரம் தடை செய்யப்படுவதனால் இந்த நிலைமைக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.