18 தமிழக மீனவர்களை விடுவிக்குமாறு கோரிக்கை

Report Print Ajith Ajith in சமூகம்

இலங்கையின் கடற்படையினரால் கடந்த ஏப்ரல் 4ஆம் திகதி கைது செய்யப்பட்ட 18 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்ய உதவுமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ராமதாஸ் கோரியுள்ளார்.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவ்ராஜிடம் இந்தக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இந்திய கடற்பகுதியான கோடிக்கரை பிரதேசத்தில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது இலங்கையின் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்தநிலையில் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர்களை விடுவிக்க உதவுமாறு ராமதாஸ் கோரியுள்ளார்.

Latest Offers