இலங்கையில் பிரபல நடிகை மீது கொடூர தாக்குதல் - இணையத்தில் வெளியாகிய காணொளி

Report Print Vethu Vethu in சமூகம்

இலங்கையின் பிரபல நடிகை பியுமி ஹன்சமாலியை சிலர் நபர்கள் கொடூரமாக தாக்கியுள்ளதாக வெளியான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இந்த தாக்குதல் சம்பவத்தை ராஜாங்க அமைச்சரும் பிரபல நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க கண்டித்துள்ளார்.

இது குறித்து தனது பேஸ்பக் பக்கத்தில் ரஞ்சன் ராமநாயக்க பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பொலிஸ் மா அதிபர் இது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த நடிகையை கீழே தள்ளி சிலரினால் மிக கொடூரமாக தாக்கும் காணொளி பேஸ்புக்கில் வெளியாகியுள்ளது.

இந்த நடிகை சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபல்யமான ஒருவராகும். கடந்த சில நாட்களாக பல நாடகங்களிலும் அவர் நடித்து வந்தார்.

இதற்கு முன்னர் கேளிக்கை விடுதிகளில் மோதல்களில் ஈடுபட்ட இந்த நடிகையின் காணொளிகள் வெளியாகியிருந்தது.

இந்த நடிகையை தாக்கும் நபரே இது பியிமி ஹன்சமாலி என்பதனை உறுதி செய்துள்ளார் என தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers