கொழும்பு பெண்களின் மோசமான செயற்பாடு அம்பலம்! பொலிஸார் வெளியிட்ட தகவல்

Report Print Vethu Vethu in சமூகம்

தென்னிலங்கையை சேர்ந்த பெண்கள் செய்யும் மோசமான செயற்பாடு தொடர்பில் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

நைனமடு பிரதேசத்தில் உள்ள சுற்றுலா ஹோட்டலில் போதைப்பொருள் பயன்படுத்தி மோசமாக நடந்து கொண்ட 5 பெண்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜாஎல, நுகேகொட, பிலியந்தலை மற்றும் மஹரகம பிரதேசத்தை சேர்ந்த 30 - 40 வயதான திருமணமான பெண்கள் ஐவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

வென்னப்புவ தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகருக்கு கிடைத்த தகவலுக்கமைய இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுற்றிவளைப்பு இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் சந்தேக நபர்களிடம் இருந்து மதுபானம் மற்றும் போதை மாத்திரைகள் தொகை ஒன்றும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த சந்தேக நபர்கள் தூர பிரதேசங்களில் உள்ள ஹோட்டல் அறைகளை ஒதுக்கிக் கொண்டு இவ்வாறு போதைப்பொருள் அருந்துவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest Offers