இந்தியாவில் இருந்து 58 அகதிகள் நாடு திரும்பினர்

Report Print Ajith Ajith in சமூகம்

இந்தியாவில் இதுவரைக் காலமும் தங்கியிருந்த இலங்கை அகதிகளில் 58 பேர் நேற்று நாடு திரும்பினர்.

23 குடும்பங்களை சேர்ந்த இவர்களில் 32 பேர் பெண்களாவர்.

இவர்கள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸூக்கு சொந்தமான இரண்டு விமானங்களில் இலங்கையை வந்தடைந்தனர்.

இவர்கள் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, திருகோணமலை மற்றும் கொழும்பை சேர்ந்தவர்களாவர்.