டைனமைட் வெடிப்பொருட்களை பயன்படுத்திய இருவர் கைது

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை, சீனக்குடா பகுதியில் டைனமைட் வெடிப்பொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டு வந்த இரண்டு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சீனக்குடா பகுதியில் நேற்று மாலை பொலிஸாரும், கடற்படையினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 20 வயதுடையவர் எனவும் மற்றவர் சின்னப்பிள்ளைச் சேனை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அவர்களிடமிருந்து 251 கிலோ மீன்கள், மீன்பிடி படகு ஒன்றும் மற்றும் இன்ஜின் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக சீனக்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை இன்று திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சீனக்குடா பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Latest Offers