சட்டவிரோத அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட அறுவர் பொலிஸாரால் சுற்றிவளைப்பு

Report Print Gokulan Gokulan in சமூகம்

சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஆறு பேரை பொகவந்தலாவ பொலிஸார் இன்றைய தினம் கைது செய்துள்ளனர்.

பொகவந்தலாவ பெற்றோசோ டெவன்போல் தோட்டப் பகுதியில் கால்நடைகளுக்கு புல் அறுக்கப்படும் புற்தரையில் பாரிய மாணிக்கக்கல் சுரங்க குழிகள் தோண்டப்பட்டு அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டபோது குறித்த அறுவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர் ஏந்திச்செல்லும் கெசல்கமுவ ஓயாவின் கிளை ஆறு ஒன்றின் அருகாமையில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வு இடம்பெற்று வருவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட அறுவரையும் இன்றைய தினம் ஹட்டன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest Offers