வெளிநாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்ட இரண்டு இலங்கைப் பெண்கள்!

Report Print Vethu Vethu in சமூகம்

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இலங்கைப் பெண்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக அரபு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

போலியான கடவுச்சீட்டு பயண்படுத்தி குவைத் நாட்டுக்குள் நுழைய முயற்சித்த பெண்களே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இரண்டு இலங்கை பெண்கள் உட்பட 3 பெண்கள் குவைத்தில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கைரேகை அடையாளம் காணும் இயந்திரம் மூலம் இந்தப் பெண்கள் சிக்கியுள்ளனர்.

குறித்த மூவரும் வாழ்நாளில் குவைத் செல்ல முடியாத வகையில் கறுப்பு பட்டியலில் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை பெண்களுடன் கைது செய்யப்பட்ட மற்றைய பெண் இந்திய நாட்டை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers