மண் விற்பனைக்கு அதிரடி தடை

Report Print Gokulan Gokulan in சமூகம்

அம்பாறை, ஒலுவில் துறைமுக வளாகத்தினுள் குவிக்கப்பட்டிருக்கும் மண்ணை அகழ்ந்து விற்பனை செய்வதற்கு அதிரடி தடையினை பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் விதித்துள்ளார்.

கொழும்பு துறைமுக அதிகார சபையின் முகாமைத்துவ பணிப்பாளர் கட்டிடத்தில் இன்று துறைமுக அதிகார சபை உயர் அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதன்போதே பிரதி அமைச்சர் உரிய அதிகாரிகளுக்கு இத் தீர்மானத்தை பணித்துள்ளார்.

மண் அகழ்வு விற்பனை தொடர்பில் திறந்த விலை மனுக்கோரல் ஒன்று துறைமுக அதிகார சபையினால் பத்திரிகையில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.

ஒலுவில் பள்ளிவாசல் சம்மேளனம் மற்றும் மக்கள் விடுத்த வேண்டுகோளிற்கு இணங்கவும் அதிரடி நடவடிக்கையாக மண் விற்பனையை பிரதி அமைச்சர் நிறுத்தியுள்ளார்.

குறித்த சந்திப்பில் இலங்கை துறைமுக அதிகார சபையின் முகாமைத்துவப் பணிப்பாளர் அதுல ஹேவவிதாரன உள்ளிட்ட பல முக்கிய உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.