ஜனாதிபதியின் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு

Report Print Kumar in சமூகம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நாட்டிற்காக ஒன்றிணைவோம் எனும் தேசிய திட்டத்திற்கு அமைவாக மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு நடைபெற்றுள்ளது.

மட்டக்களப்பு, மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று காலை அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் தலைமையில் இச்செயலமர்வு இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் அரசாங்கத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் பற்றி ஊடகவியலாளர்களுக்கு தெளிவூட்டுவதற்காகவே இச்செயலமர்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஊடகவியலாளர்களின் ஆற்றல் மற்றும் அறிவை மேம்படுத்தும் விரிவுரைகளும் இதன்போது இடம்பெற்றுள்ளன.

இந்நிகழ்வை அரசாங்க தகவல் திணைக்களமும் இலங்கை பத்திரிகை பேரவையும் இணைந்து நடத்தியுள்ளது.

இந்நிகழ்வில், அரசாங்க தகவல் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் எல்.பி திலகரத்ன, தகவல் திணைக்கள பணிப்பாளர் ஹர்ஷ ஜெயதிஸ்ஸ, பத்திரிக்கை பேரவையின் உதவி ஆணையாளர் விஜயரத்ன, தொலைக்காட்சி ஒன்றின் உதவிப் பணிப்பாளர் மோசஸ், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி, வளவாளர்களாக பத்திரிக்கை ஒன்றின் சிரேஷ்ட ஆசிரியர் செந்தில் வேலவன் மற்றும் உதவி மாவட்ட செயலாளர் இ.நவேஸ்வரன் ஆகியோரும் பங்குபற்றியுள்ளனர்.

இந்நிகழ்வில் மாவட்ட ஊடகவியலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Latest Offers