மன்னாரில் சித்திரை புத்தாண்டு விற்பனைக் கண்காட்சி

Report Print Ashik in சமூகம்

மன்னாரில் 2019ஆம் ஆண்டிற்கான சமுர்த்தி சௌபாக்கியா சித்திரை புத்தாண்டு விற்பனைக் கண்காட்சி இடம்பெற்றுள்ளது.

மன்னார் பிரதேச செயலக பிரதான வீதியில் இன்று காலை இக்கண்காட்சி நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் எஸ்.குணபாலனும், விருந்தினர்களாக மன்னார் உதவி பிரதேச செயலாளர் சிவசம்பு கனகாம்பிகை, கிராம அலுவலகர்களுக்கான நிர்வாக உத்தியோகத்தர் ராதா பெர்னாண்டோ ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது உள்ளூர் உற்பத்திப் பொருட்கள், கைப்பணி பொருட்கள், நஞ்சற்ற மரக்கறி வகைகள் என்பன விற்பனை காட்சியில் வைக்கப்பட்டுள்ளதோடு மக்கள் மலிவு விலையில் பொருட்களை கொள்வனவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.