பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்களுக்கு விளக்கமறியல்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த மூன்று பெண்களை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் முன்னிலையில் குறித்த பெண்களை இன்று ஆஜர்ப்படுத்தியபோதே எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் அனுராதபுரம், கண்டி, குருநாகல் பகுதியைச் சேர்ந்த 23 மட்டும் 28 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

திருகோணமலை, அலஸ் தோட்டம் பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் பாலியல் விடுதிகள் நடைபெற்று வருவதாக கூறி பிரதேசமக்கள் கடந்த மாதம் வீதி மறித்து ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து மசாஜ் நிலையங்களை மூடுவதற்கு பொலிஸார் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வந்தனர்.

இதேவேளை அரசாங்கத்தினால் அனுமதிப்பத்திரம் வழங்கப்படாததை அடுத்து பாலியல் விடுதியை முற்றுகையிட்ட பொலிஸார் நேற்றிரவு ஏழு பெண்களை கைது செய்துள்ளனர்.

Latest Offers