இலங்கையின் ஒரு பகுதியில் தாழிறங்கிய நிலம்

Report Print Thirumal Thirumal in சமூகம்

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோர்வூட் நகரின் விகாரைக்கு அருகில் காணப்படும் குடியிருப்பு பகுதிகளில் தாழிறக்கம் ஏற்பட்டதில் அப்பிரதேசத்தில் உள்ள இரண்டு வீடுகள் பாதிப்படைந்துள்ளன.

நோர்வூட் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பிற்பகல் வேளையில் பெய்து வரும் மழை காரணமாகவே இத்தாழிறக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பகுதியில் ஒரு வீட்டில் இரண்டு அறைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதோடு, மற்றுமொரு வீட்டில் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. அத்தோடு சுவர்களும் இடிந்து விழுந்துள்ளன.

இதில் உயிராபத்துகள் எதுவும் ஏற்படவில்லை எனவும், பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் இப்பிரதேச கிராம சேவகர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Latest Offers