மட்டக்களப்பில் டெங்கு ஒழிப்பு சிரமதான பணி

Report Print Rusath in சமூகம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நாட்டிற்காக ஒன்றினைவோம் என்ற தேசிய திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு பன்சலை வீதியை அண்டிய பகுதிகளில் இன்றைய தினம் சிரமதான பணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொலிசாரினாலும் மட்டக்களப்பு மாநகர சபை டெங்கு ஒழிப்பு பிரிவு அதிகாரிகளாலும் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எம்.எம்.ஜி.பு.டயல் தீகஹவத்துர தலைமையில் நடைபெற்ற இந்த சிரமதான பணியில் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலானா மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.